< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு
|9 July 2023 3:54 PM IST
மறைமலைநகர் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பேரமனூர் எம்.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது வீட்டுக்குள் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். இது குறித்து சந்திரசேகர் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் மறைந்திருந்த நல்ல பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.