< Back
மாநில செய்திகள்
பல்லடம்: வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு..!
மாநில செய்திகள்

பல்லடம்: வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு..!

தினத்தந்தி
|
5 Oct 2022 5:04 PM IST

பல்லடம் அருகே வீட்டில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரை சேர்ந்த சிவசக்தி என்பவரது மகள் மைசிகாஸ்ரீ அதே பகுதியில் வசிக்கும் பாட்டி விளையாட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளார். வீட்டின் நுழைவு வாயில் கேட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி தவறி கீழே விழந்ததாக கூறப்படுகிறது.

மயங்கிய சிறுமியை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுமி இழப்பை தாங்க முடியாமல் உறவினர்கள் கதறியது காண்போரை கண்கலங்க செய்தது.

மேலும் செய்திகள்