< Back
மாநில செய்திகள்
காரைக்கால் அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு
மாநில செய்திகள்

காரைக்கால் அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு

தினத்தந்தி
|
7 May 2023 8:07 PM IST

காரைக்காலில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி மீது கம்பி குத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால்,

காரைக்காலில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி மீது கம்பி குத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் வட மாநிலத்தைச் சேர்ந்த சுகுணா குப்தா என்பவர் தனியார் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் குடும்பத்துடன் காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமி கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

வீட்டின் சுற்றுச்சுவர் கேட்டின் மீது விழுந்த சிறுமியின் முதுகில் கேட்டின் கம்பிகள் குத்தி ரத்த வெள்ளத்தில் கதறியுள்ளார். சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்