< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 48 மணி நேரம் நடைபெற்ற சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 48 மணி நேரம் நடைபெற்ற "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

தினத்தந்தி
|
30 Jun 2022 2:25 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பல்வேறு பாதுகாப்புப் படைகள் பங்கேற்ற சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பல்வேறு பாதுகாப்புப் படைகள் பங்கேற்ற சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

மாநில அரசின் மேற்பார்வையில் இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைமை தளபதியால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் தமிழக காவல்துறை சார்பாக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, கலந்துகொண்டார்.

தமிழகம் மற்றும் புதுரை கடல் சார் மாநிலமாக இருப்பதால் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழுமம், 14 கடலோர மாவட்ட காவல்துறையினர், மத்திய தொழிற் பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொண்டன.

இந்த ஒத்திகையின் போது கப்பல் கடத்தப்படுதல், கப்பலில் இருந்து பினைக்கைதிகள் மீட்கப்படுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பு நடைமுறைகளும் ஒத்திகை பார்க்கப்பட்டன. இரு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்