25 வயது வாலிபரை திருமணம் செய்த 40 வயது பெண்.. திருமண புகைப்படத்தை முதல் கணவருக்கு அனுப்பி கதறவிட்ட கொடுமை!
|முகநூலில் ஏற்பட்ட கள்ளக்காதலால், திருமண வயதில் 2 மகன்களை தவிக்க விட்டுவிட்டு 25 வயது வாலிபரை 40 வயதுடைய பெண் 2-வது திருமணம் செய்துகொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயது. இந்த தம்பதியினருக்கு 22 வயது மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனது சுக, துக்கங்களை மறந்து அந்த குடும்ப தலைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.
அங்கு சென்ற அவர், தனது குடும்பத்தினரின் நலனுக்காக தன்னை வருத்திக்கொண்டு பணம் சம்பாதித்து வீட்டிற்கு அனுப்பி வந்தார். மகன்களின் படிப்புக்காக அந்த பெண், தங்கள் கிராமத்தில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அந்த வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.
முகநூல் மூலம் நட்பு
அந்த பெண்ணின் மூத்த மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு சென்று வருகிறார். இளைய மகன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மகன்கள் இருவரும் வேலை, படிப்புக்காக தினமும் பகல் பொழுது முழுவதும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுவதால் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண் முகநூல் மூலம் பல்வேறு நண்பர்களுடன் தனது நேரத்தை செலவிட தொடங்கினார். பல்வேறு நண்பர்களுடன் நட்பு இருந்தாலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
கவர்ச்சி படங்களை அனுப்பினார்
முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்கு இடையே அதீத நெருக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வாலிபருடனான நெருக்கத்தால் தான் திருமணமானவள் என்பதையும், தனக்கு திருமண வயதில் 2 மகன்கள் இருப்பதையும் அந்த பெண் அடியோடு மறந்துவிட்டார். இருவரும் முகநூலில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.
தன்னை விதவிதமாக அலங்கரித்துக்கொண்டு கவர்ச்சியாக படம் பிடித்து அதை அந்த வாலிபருக்கு அந்த பெண் அனுப்பி வைத்துள்ளார். அந்த படங்களை பார்த்த அந்த வாலிபர் மெய்மறந்து போனார். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் முகநூல் மூலமே பேசிக்கொள்வது. உன்னை உடனடியாக நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்மணியும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
அடிக்கடி தனிமையில் இருந்தனர்
இதனையடுத்து அந்த வாலிபர் தனது சொந்த ஊரில் இருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஒரத்தநாட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த அந்த வாலிபர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்துள்ளார்.
கணவர் வெளிநாட்டில் இருந்ததும், மகன்கள் இருவரும் வீட்டில் இல்லாததும் அந்த பெண்ணுக்கு மிகுந்த சவுகரியமாக போய்விட்டது. தன்னை கேட்க ஆள் இல்லாததால் அந்த பெண் தனது இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டு வந்துள்ளார். அந்த வாலிபர் ஓட்டி வந்த ஆட்டோவில் இருவரும் ஒரத்தநாட்டில் இருந்து தொலைதூரத்திற்கு சென்று அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டை விட்டு ஓட்டம்
இதன்காரணமாக அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கள்ளக்காதலை மறைத்த தன்னால் தனது வயிற்றில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் சென்று குடும்பம் நடத்த முடிவு செய்தார்.
தனது மகன்களுக்கு விவரம் தெரியும் முன்பாகவே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த அந்த பெண், தனது கணவர் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி அனுப்பி வைத்த பணத்தில் வாங்கிய நகைகள் மற்றும் பணத்துடன் கடந்த 12-ந்தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் மாயமானார்.
போலீசில் புகார்
இந்த நிலையில் காலையில் எழுந்த அந்த பெண்ணின் மகன்கள் வீட்டில் தனது தாயாரை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெளிநாட்டில் உள்ள தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த பெண்ணின் மூத்த மகன் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், தனது தாயார் வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாகவும், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தையும் காணவில்லை என்றும் அதில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவருக்கு அனுப்பி கதற விட்டார்
இதற்கிடையில் கணவர் மற்றும் மகன்களின் வாழ்க்கையை எண்ணிப்பார்க்காமல் தனது உல்லாச வாழ்க்கைக்காக கள்ளக்காதலனுடன் சென்ற அந்த பெண், கடலூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் அதனுடன் சேர்த்து ஒரு ஆடியோ பதிவையும் வெளிநாட்டில் உள்ள தனது முதல் கணவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில், தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவருடன் குடும்பம் நடத்த உள்ளதாகவும் அதில் கூறியிருப்பதாக தெரிகிறது.
தனது மனைவி அனுப்பியிருந்த அந்த புகைப்படங்களை பார்த்தும், அந்த ஆடியோ பதிவை கேட்டும் அந்த பெண்ணின் கணவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.