< Back
மாநில செய்திகள்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
சேலம்
மாநில செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

தினத்தந்தி
|
8 Feb 2023 1:00 AM IST

சூரமங்கலம்:-

சேலம் சித்தனூர் அருகே உள்ள மல்ல மூப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 4 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தாள். இதனிடையே அந்த சிறுமியின் அலறல் சத்தம் வீட்டின் குளியலறையில் இருந்து திடீரென கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் குளியலறையில் இருந்து தப்பி ஓடினான். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில், சிறுமிக்கு, மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்