< Back
மாநில செய்திகள்
ஆற்றில் மூழ்கி 4 வயது சிறுமி பலி
திருவாரூர்
மாநில செய்திகள்

ஆற்றில் மூழ்கி 4 வயது சிறுமி பலி

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

நீடாமங்கலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.

4 வயது சிறுமி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பொதக்குடி பகுதியை சேர்ந்தவர் முகமதுசுலைமான். இவரது மகள் சுகைரா(வயது4). நேற்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் முகமதுசுலைமான் மகளை அழைத்து கொண்டு நீடாமங்கலம் அருகே தண்டாலம் பாலம் வடக்கு பகுதியில் உள்ள கோரையாற்றில் குளிப்பதற்காக சென்றார். பின்னர் ்ஆற்றில் முகமதுசுலைமான் குளிக்க சென்றார்.

அப்போது கரையில் சுகைரா அமர்ந்து இருந்தார். பின்னர் சுகைராவும் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கோரையாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது.

ஆற்றில் மூழ்கினார்

ஆற்றில் மூழ்கிய சுகைரா அடித்து செல்லப்பட்டார். மகளை காணாததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் தேவங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தேவங்குடி போலீசார் மற்றும் கூத்தாநல்லூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் ஆற்றில் இறங்கி சிறுமியை தேடினர். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது.

உடல் மீட்பு

இதனால் கோரையாறு தலைப்பில் உள்ள அணையை அடைத்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆற்றில் மூழ்கிய நிலையில் சுகைரா உடல் மீட்கப்பட்டது. பின்னர் சிறுமி உடல் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோருடன் ஆற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்