< Back
மாநில செய்திகள்
பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலி.. நீலகிரியில் சோகம்
மாநில செய்திகள்

பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலி.. நீலகிரியில் சோகம்

தினத்தந்தி
|
27 Nov 2023 7:43 PM IST

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி படித்து வந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கூக்கல்தொரை பகுதியில் வசித்து வந்த சிறுமி லயா பள்ளி முடிந்து பேருந்தில் இருந்து கீழே இறங்கி பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார். அதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கியபோது சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தியாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்