< Back
மாநில செய்திகள்
திருவட்டார் அருகே 4 வயது குழந்தை பாம்பு கடித்து பலி
மாநில செய்திகள்

திருவட்டார் அருகே 4 வயது குழந்தை பாம்பு கடித்து பலி

தினத்தந்தி
|
14 Jun 2022 3:31 PM IST

திருவட்டார் அருகே 4 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவட்டார்,

கன்னியாகுமரி மாவட்டம், குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளையை சேர்ந்தவர் சுரேந்தின் . கூலிதொழிலாளி.இவருடைய மனைவி விஜிமோள். இவர்களுக்கு சுஷ்வின்சிஜோ (வயது 12),சுஜிலின் ஜோ (9) என்ற இரண்டு ஆண் குழந்தைகளும்,சுஷ்விகா மோள் (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில்,சுரேந்திரன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.அதேபோல் நேற்று இரவும் சுரேந்திரன் குடித்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.அப்போது மூன்று குழந்தைகளும் அப்பாவிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஓடினர்.

கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டதால் அவர்கள் குழந்தைகளை தேட வில்லை என தெரிகிறது.சற்று நேரம் கழித்து இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.அதன் பிறகு ரொம்ப நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுஷ்விகா மோள் தன்னை பாம்பு கடித்ததாகக் அழுதபடியே கூறியுள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் சுஷ்விகா மோளை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சுஷ்விகா மோள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.4 வயது பெண் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்