சென்னை
கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பலி
|சென்னை அம்பத்தூரில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பலியானது.
சென்னை அம்பத்தூர் எஸ்டேட், காஞ்சனா குப்பம், பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் புருசோத்தமன். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவருடைய மனைவி நீலாம்பரி, 3-வதாக கர்ப்பமாகி இருந்தார். அவர் பிரசவத்துக்காக எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
நேற்று புருஷோத்தமனின் மூத்த மகனான 4 வயது பிரின்ஸ், பிஸ்கட் வாங்க கடைக்கு சென்றான். நீண்டநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த புருசோத்தமன், மகனை தேடிச்சென்றார். அப்போது மண்ணூர்பேட்டை நேரு நகரில் உள்ள கிணற்றில் பிரின்ஸ் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் மிதந்த பிரின்ஸ் உடலை மீட்டனர். அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிேசாதனைக்காக கீழ்ப்பக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிணற்றின் சுவரை தாண்டி குழந்தையால் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே குழந்தையை யாராவது கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.