< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை பிராட்வேயில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
|19 April 2023 12:29 PM IST
சென்னை பிராட்வேயில் பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
சென்னை,
சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையானா நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் 4-வது தளத்தில் புணரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் சிக்கியிருக்கலாம் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் பொதுமக்கள் கட்டிடத்திற்கு அருகே செல்லாமல் இருக்கவும் வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.