< Back
மாநில செய்திகள்
கோவிலில் சாமி கும்பிட சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு
திருச்சி
மாநில செய்திகள்

கோவிலில் சாமி கும்பிட சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு

தினத்தந்தி
|
2 July 2023 1:12 AM IST

கோவிலில் சாமி கும்பிட சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டது.

மணப்பாறை,

கோவிலில் சாமி கும்பிட சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டது.

சாமி கும்பிட..

மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் வேலாயி (வயது 65). நேற்று பிரதோஷம் என்பதால் மணப்பாறை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு வேலாயி சாமி கும்பிட சென்றார். அப்போது, கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அவர் தற்செயலாக தனது கழுத்தை பார்த்தபோது, தான் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி நைசாக சங்கிலியை திருடி சென்றுவிட்டார்.

கதறி அழுதார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலில் நின்று கதறி அழுதார். அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துபார்த்தும் தங்க சங்கிலி கிடைக்கவில்லை. தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலில் இருந்த அனைவரையும் சோதனை செய்த பின்பு வெளியே அனுப்பினர். இருப்பினும் சங்கிலியை திருடியவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்