< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
|18 Feb 2023 1:41 AM IST
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாகுடி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் செல்லையன் (வயது 60). விவசாயி. நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இவர் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மனைவி சத்தம் போட்டதை கேட்டு செல்லையன் எழுந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செல்லையன் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். ்அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.