சென்னை
அச்சரப்பாக்கத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை சாவு
|அச்சரப்பாக்கத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காந்திநகர் கிழக்கு பழ தோட்டத்தை சேர்ந்தவர் சத்தியவாணன். இவரது மகன் கவி மித்திரன் (வயது 3). நேற்று மாலை வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்த குழந்தை கவி மித்திரனை காணவில்லை என்று பெற்றோர் தேடினர். அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் கவி மித்திரன் தலை குப்புற விழுந்து கிடந்தான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அச்சரப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.