< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் காயம்
|17 July 2023 1:23 PM IST
திருவொற்றியூரில் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் காயம் அடைந்தார்.
திருவொற்றியூர் வடக்கு மாட வீதி செட்டி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நிர்மலா (வயது 50). பழமையான இந்த வீட்டில் பல இடங்களில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த வீட்டின் மாடியில் உள்ள பால்கனி சுற்றுச்சுவர் இடிந்து கீழே வெங்கடேசன் என்பவரது ஓட்டு வீட்டில் விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம் உடைந்த பால்கனி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி தெருவில் சிதறியதால் அங்கு விளையாடி கொண்டிருந்த நிர்மலாவின் பேரன் 3 வயது நவீன் கிஷோர் தலையில் விழுந்தது.
இதில் தலையில் காயம் அடைந்த சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்று சிகிச்சை அளித்தனர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.