< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
|6 Oct 2023 12:29 AM IST
கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு 2 மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் கற்பகம் அவர்களுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமையிலான குழுவினர் கொளத்தூரில் உள்ள 2 மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று அவர்களுக்கு 3 சக்கர சைக்கிளை வழங்கினார். அவர்கள் கலெக்டருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.