< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
|30 Sept 2022 1:37 AM IST
தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொய்யுண்டார்கோட்டை பழங்கொண்டார் தெருவை சேர்ந்த சேகர் மனைவி கஜராஜவள்ளி (வயது57). கடந்த 10 மாதத்திற்கு முன்பு சேகர் இறந்துவிட்டார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் ஒரு பகுதியில் கஜராஜவள்ளி தூங்கி கொண்டிருந்தார். இவரது மகனும், மருமகளும் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர் கஜராஜவள்ளி கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டவுசர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.