< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: ஸ்பீக்கர் பாக்ஸ் சரிந்து விழுந்து 3 மாத பெண் குழந்தை பலியான சோகம்!
மாநில செய்திகள்

திருவண்ணாமலை: ஸ்பீக்கர் பாக்ஸ் சரிந்து விழுந்து 3 மாத பெண் குழந்தை பலியான சோகம்!

தினத்தந்தி
|
12 Jun 2022 11:16 AM IST

திருவண்ணாமலை அருகே தூங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை மீது ஸ்பீக்கர் பாக்ஸ் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த சீலபந்தல் ஊராட்சிக்குஉட்பட்ட பிச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் விஜய், கூலி தொழிலாளி. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தையை வீட்டில் தரையில் படுக்க வைத்து இருந்தார். அப்போது வீட்டின் பரணில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாராவிதமாக சரிந்து தரையில் படுக்க வைத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்தது.

இதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்