< Back
தமிழக செய்திகள்
தஞ்சையில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

தஞ்சையில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
26 Aug 2023 2:16 AM IST

தஞ்சையில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று காலை 10 மணி முதல், இன்று காலை 10 மணி வரை, 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் தேசிங்குராஜன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முருகேசன் வரவேற்றார்.போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்