< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர 'வரையாடு' சிலை..!
|29 Oct 2023 6:19 AM IST
ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலை அருகே மலை உச்சியில் வரையாட்டிற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட விலங்காக வரையாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டை அறிந்து கொள்ளும் வகையில் நெல்லை மாவட்டத்தில் பிரம்மாண்ட வரையாடு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலை அருகே மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையானது அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.