< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
|2 Oct 2022 1:30 AM IST
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜலகண்டாபுரம் அருகே தோரமங்கலம் ஊராட்சி மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். நெசவுத்தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (வயது 47). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி 2 பேரும் தனித்தனியாக தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க சுமதி முயன்றபோது, 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.