< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
300 குடும்பத்தினருக்கு தென்னங்கன்றுகள்
|28 Jun 2023 5:28 PM IST
குப்பம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் 300 குடும்பத்தினருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன
கண்ணமங்கலம்
குப்பம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் 300 குடும்பத்தினருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன
கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் முகாம் நடந்தது.
போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், சந்தவாசல் துணை வேளாண்மை அலுவலர் ராமு ஆகியோர் 300 குடும்பத்தினருக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகளை வழங்கினர். இதில் குப்பம் ஊராட்சி தலைவர் அமுதா முரளி, ஒன்றிய கவுன்சிலர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் அசோக்குமார் நன்றி கூறினார்.