< Back
மாநில செய்திகள்
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

தினத்தந்தி
|
10 March 2023 12:15 AM IST

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும், 19 வயது வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். இதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர், அங்கு சென்றார். தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அதை வீடியோ எடுத்து சிறுமியின் வாட்ஸ்-அப் எண்ணுக்கே அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியின் செல்போனில் இருந்த அந்த வீடியோவை உறவினர்கள் பார்த்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்