< Back
மாநில செய்திகள்
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

தினத்தந்தி
|
4 Feb 2023 12:15 AM IST

திருமணம் செய்வதாக கூறி 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

திருமணம் செய்வதாக கூறி 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாலியல் பலாத்காரம்

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் 17 வயது சிறுமி கொடுத்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நான் பிளஸ்-2 வரை படித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அந்த கடை உரிமையாளரின் மகனான கதிரேசன்(வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் என்னை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தர்மபுரிக்கு கதிரேசன் அழைத்து சென்றார். அங்குள்ள பஸ் நிலையம் அருகே கணவன், மனைவி என்று கூறி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தோம். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தோம். மேலும் கதிரேசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

போக்சோ வழக்கு

இதற்கிடையில் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வரவே இல்லை. எனவே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஏற்கனவே அந்த சிறுமி காணாமல் போனதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கதிரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்