< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
|6 July 2023 11:40 PM IST
சென்னை பல்லாவரத்தில், வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால், 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை பல்லாவரத்தில், வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால், 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த மாரியம்மாளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மாரியம்மாளின் கடைசி மகன் ஜெகதீஷ் என்பவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று காலை ஜெகதீஷின் தாயார் மாரியம்மாள், வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வைக்காததால் ஜெகதீஷை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெகதீஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து பல்லாவரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.