பரபரப்பான கபடி போட்டியில் தலையில் விழுந்த அடி... 16 வயது சிறுவன் மயங்கி விழுந்து பலி
|காரைக்குடியில் கபடி விளையாடிய போது தலையில் அடிப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி,
காரைக்குடியில் கபடி விளையாடிய போது தலையில் அடிப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
காரைக்குடி, செஞ்சை பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று மதியம் நடைபெற்ற கபடி போட்டியில் வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த பிரதாப் என்ற 16 வயது சிறுவன் பங்கேற்றார். இந்த கபடி போட்டியில் ஏற்பாட்டாளர்கள் முறையான ரப்பர் சீட்டு விரித்து அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முறையாக செய்திருந்தனர்.
இந்த நிலையில் பிரதாப் விளையாடி வரும் போது சகவீரர்கள் அவரைப் பிடித்தனர். அப்போது தலைகுப்புற விழுந்ததில் அவருடைய தலையின் பின்புறம் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக எழுந்த அவர், தனியாக போய் உட்கார்ந்த 5 நிமிடம் கழித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சகவீரர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காரைக்குடி தெற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.