< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போனுக்காக தம்பியுடன் சண்டை போட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட 15 வயது சிறுமி
|28 Dec 2022 2:21 PM IST
திருப்போரூர் அருகே செல்போனில் கேம் விளையாடுவதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் அக்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு,
திருப்போரூர் அருகே செல்போனில் கேம் விளையாடுவதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் அக்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த நிலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த போது செல்போனில் கேம் விளையாடுவதில் தம்பியுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென வீட்டில் உள்ள அறையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.