< Back
மாநில செய்திகள்
காரைக்காலில் 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை
மாநில செய்திகள்

காரைக்காலில் 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
27 May 2024 11:32 PM IST

சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால்,

காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் நாகை - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட சிறுவன் திருப்பட்டினம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த சந்தோஷ் என்பதும், 8-ம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

எனவே, சிறுவனை 19 வயது இளைஞர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த இளைஞரை வலை வீசி தேடி வருகின்றனர். காரைக்கால் அருகே 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்