வேலூர்
வீட்டுக்கு புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு
|ஒடுகத்தூர் அருகே வீட்டுக்கு புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
அணைக்கட்டு
ஒடுப்புத்தூர் அருகே வெங்கனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, விவசாயி. இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கட்டிலில் புகுந்தது.
இன்று மாலை நிலத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சக்கரவர்த்தி குடும்பத்தினர் கட்டிலில் மலைப்பாம்பு சுருண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டின் மாடத்தில் பதுங்கி இருந்த சுமார் 13 அடி மலைப்பாம்பை பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.
ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட மலை பாம்புகள் பிடிபட்டுள்ளன. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சைத்தை ஏற்படுத்தி உள்ளது.