< Back
மாநில செய்திகள்
வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் காயம்.. சென்னையில் மீண்டும் சம்பவம்
மாநில செய்திகள்

வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் காயம்.. சென்னையில் மீண்டும் சம்பவம்

தினத்தந்தி
|
1 Jun 2024 7:05 PM IST

நாய் கடித்ததில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை கொரட்டூர் டீச்சர்ஸ் காலனியில் 12 வயது சிறுவன் ஒருவன் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது ராட்வீலர் வகை நாயுடன் ஒருவர் சாலையில் வந்துகொண்டிருந்தார். சிறுவனை கண்டதும் அந்த நாய் குரைத்துள்ளது. இதனால் அச்சமடைந்த சிறுவர் ஓடவே, சிறுவனை துரத்திச்சென்று அந்த நாய் கடித்து குதறியது.

நாய் கடித்ததில் சிறுவனின் முதுகு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை அவரது தந்தை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும், இது தொடர்பாக புழல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் நுங்கம்பாக்கத்தில் ராட்வீலர் வகை நாய் கடித்து 5 வயது சிறுமி காயமடைந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் செய்திகள்