10 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய 25 இளைஞர்கள் - சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு...!
|குடும்பத்துடன் திருட வந்தவர்களை தாக்கியதில், 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கிள்ளனூர் பகுதிகளில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அங்கு உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவிவை 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றுள்ளனர். பின்னர், ஆட்டோவை மடக்கி பிடித்து அதில் இருந்தவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் 10 வயது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்த சிறுமி உட்பட குடும்பத்தினரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நாராயணசாமி என்பவர் மீது கொலை திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை தாக்கிய இளைஞர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.