< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
சமையல் அறையில் புகுந்திருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
|24 Sept 2023 11:20 PM IST
சமையல் அறையில் புகுந்திருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
அன்னவாசல் அருகே சுந்தரம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டின் உள்ள சமையலறைக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து அவர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 10 அடிநீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர்.