< Back
மாநில செய்திகள்
10 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்
கரூர்
மாநில செய்திகள்

10 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
24 Feb 2023 12:56 AM IST

கிருஷ்ணராயபுரம் அருகே 10 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.

கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பாயம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்தநிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் மின் கம்பி உரசியதில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், கரும்புத்தோட்டம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் பீதியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 10 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்