< Back
மாநில செய்திகள்
அரும்பாக்கத்தில் வெந்நீர் உடலில் கொட்டி 1½ வயது குழந்தை பலி
சென்னை
மாநில செய்திகள்

அரும்பாக்கத்தில் வெந்நீர் உடலில் கொட்டி 1½ வயது குழந்தை பலி

தினத்தந்தி
|
4 May 2023 1:34 PM IST

அரும்பாக்கத்தில் வெந்நீர் உடலில் கொட்டி 1½ வயது ஆண் குழந்தை பலியானது.

சென்னை அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 37), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அரிகரன் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது.

பரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிப்பதற்காக வெந்நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வீட்டில் வைத்திருந்தார். அப்போது இவரது 1½ வயது குழந்தையான அரிகரன் பொற்றோர்கள் கவனிக்காத நேரத்தில் வெந்நீர் ஊற்றி வைத்திருந்த பாத்திரம் அருகே நடந்து சென்று எதிர்பாராத விதமாக அதை கொட்டினார். பாத்திரத்தில் இருந்த வெந்நீர் குழந்தையின் மீது அப்படியே கொட்டியது.

இதில் படுகாயமடைந்து வலியால் அலறி துடித்த குழந்தையை கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தை அரிஹரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன குழந்தை அரிகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெண்ணீர் உடலில் கொட்டி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்