< Back
மாநில செய்திகள்
மதுரவாயலில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

மதுரவாயலில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
4 March 2023 10:56 AM IST

மதுரவாயலில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மகள் மோனிகா (வயது 14). இவர், சின்ன போரூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய மோனிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கபடி வீரரான மோனிகா, பள்ளியில் உள்ள கபடி அணியில் இடம் பெற்றிருந்தார்.

மாணவி மோனிகா, பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை கண்டித்த ஆசிரியர்கள், இது தொடர்பாக அவரது பெற்றோரையும் பள்ளிக்கு அழைத்து எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்