< Back
மாநில செய்திகள்
9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
10 Dec 2022 12:15 AM IST

9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள மேல்சாமல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் சத்யா (வயது 14). இவர் ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மாணவிக்கு நோய் குணம் அடையவில்லை.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சத்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்