< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

தினத்தந்தி
|
2 April 2023 2:03 PM IST

ஒழுங்காக படிக்கும்படி பெற்றோர் கூறியதால் மனம் உடைந்த 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர் ஜோதி நகர் ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய மகன் ரிஷி (வயது 15). இவர், எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் ரிஷி குளியல் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரிஷி குளியல் அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் மற்றும் அண்ணன் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரிஷி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் தூக்கில் தொங்கிய ரிஷி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிக்கு சரியாக படிப்பு வராதாம். இதனால் அவரை ஒழுங்காக படிக்கும்படி அவரது பெற்றோரும், உறவினர்களும் கூறினர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்