< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9.91 லட்சம் கணக்குகள் தொடக்கம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9.91 லட்சம் கணக்குகள் தொடக்கம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

தினத்தந்தி
|
20 Sept 2023 10:47 PM IST

முதல்-அமைச்சரின் பாராட்டை கூட்டுறவு வங்கிகள் பெற்றுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் 9.91 லட்சம் கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்-அமைச்சரின் பாராட்டை கூட்டுறவு வங்கிகள் பெற்றுள்ளன. முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக மட்டுமின்றி, இன்னும் கூடுதலாகவே கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்களின் செயலாற்றி இருப்பது பாராட்டுக்குரியது."

இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்