< Back
மாநில செய்திகள்
பொதுமக்களிடம் இருந்து 98 மனுக்கள் பெறப்பட்டன
நீலகிரி
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் இருந்து 98 மனுக்கள் பெறப்பட்டன

தினத்தந்தி
|
6 Aug 2023 2:45 AM IST

குந்தலாடியில் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 98 மனுக்கள் பெறப்பட்டன.

பந்தலூர்

பந்தலூர் அருகே குந்தலாடியில் வருகிற 23-ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. முகாமுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்குகிறார். இதையொட்டி வருவாய்த்துறை சார்பில், மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கல்பனா தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடேஷ், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் லதா, கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குந்தலாடி, பொன்னானி, நெல்லியாளம், உப்பட்டி, ஓர்கடவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். இந்த மனுக்கள் மீது கலெக்டர் தலைமையில் நடைபெறும் முகாமில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்