திருச்சி
அமலாக்க-கணக்கு அதிகாரி தேர்வை 962 பேர் எழுதினர்
|அமலாக்க-கணக்கு அதிகாரி தேர்வை 962 பேர் எழுதினர்.
அமலாக்க அதிகாரி தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அமலாக்க அதிகாரி மற்றும் கணக்கு அதிகாரி, உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் இ.பி.எப்.ஓ -2023 தேர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. தேர்வு அறைக்குள் தேர்வர்களை காலை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதற்கு பிறகு வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற அமலாக்க அதிகாரி மற்றும் கணக்கு அதிகாரி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2,286 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 962 பேர் தேர்வு எழுதினர். 1,324 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கண்காணிப்பு
இதேபோல் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேர்வை 924 பேர் எழுதினர். 1,311 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு பணிக்காக 6 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்த குழுவில் துணை வட்டாட்சியர் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியர் நிலையில் ஆய்வு அலுவலர் கண்காணிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ேதர்வர்கள், தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.