< Back
மாநில செய்திகள்
பிளஸ்-1 கணித தேர்வினை 9,383 பேர்  எழுதினர்
விருதுநகர்
மாநில செய்திகள்

பிளஸ்-1 கணித தேர்வினை 9,383 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
6 April 2023 1:27 AM IST

பிளஸ்-1 கணித தேர்வினை 9,383 மாணவ-மாணவிகள் எழுதினர். 165 பேர் தேர்வு எழுத வரவில்லை.


பிளஸ்-1 கணித தேர்வினை 9,383 மாணவ-மாணவிகள் எழுதினர். 165 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-1 தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-1 இறுதிநாள் கணித பாடத்தேர்வினை 4,567 மாணவர்களும், 4,981 மாணவிகளும் ஆக மொத்தம் 9,548 மாணவ-மாணவிகள் எழுத வேண்டிய நிலையில் 4,487 மாணவர்களும், 4,896 மாணவிகளும் ஆக மொத்தம் 9,383 பேர் தேர்வு எழுதினார். 80 மாணவர்களும், 85 மாணவர்களும் ஆக மொத்தம் 165 பேர் தேர்வு எழுத வரவில்லை.

விலங்கியல் தேர்வினை 693 மாணவர்களும், 1,623 மாணவிகளும் ஆக மொத்தம் 2,316 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிவையில் 615 மாணவர்களும், 1,563 மாணவிகளும் மொத்தம் 2,178 பேர் தேர்வு எழுதினர். 78 மாணவர்களும், 60 மாணவிகளும் ஆக மொத்தம் 138 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆடை வடிவமைப்பு

வணிகவியல் தேர்வினை 4,150 மாணவர்களும், 3,941 மாணவிகளும் ஆக மொத்தம் 8,091 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 3,767 மாணவர்களும், 3,747 மாணவிகளும் ஆக மொத்தம் 7,514 பேர் தேர்வு எழுதினர். 383 மாணவர்களும், 194 மாணவிகளும் ஆக மொத்தம் 577 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு தேர்வினை 77 மாணவிகள் எழுத வேண்டிய நிலையில் 62 மாணவிகள் எழுதினர். 15 பேர் வரவில்லை. விவசாய பாடப் பிரிவு தேர்வினை 236 மாணவர்களும், 118 மாணவிகளும் ஆக மொத்தம் 354 பேர் எழுத வேண்டிய நிலையில் 199 மாணவர்களும், 110 மாணவிகளும் ஆக மொத்தம் 309 பேர் எழுதினார். 37 மாணவர்களும், 8 மாணவிகளும் ஆக மொத்தம் 45 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நர்சிங் பாட பிரிவு

நர்சிங் பாட பிரிவு தேர்வினை 67 மாணவிகள் எழுத வேண்டிய நிலையில் 67 பேரும் தேர்வு எழுதினர். மொத்தம் நேற்று நடைபெற்ற பிளஸ்-1 தேர்வினை 9,646 மாணவர்களும் 10,807 மாணவிகளும் ஆக மொத்தம் 20,453 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 9,068 மாணவர்களும், 10,445 மாணவிகளும் ஆக மொத்தம் 19,513 பேர் தேர்வு எழுதினர்.

578 மாணவர்களும், 362 மாணவிகளும் ஆக மொத்தம் 940 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்