< Back
மாநில செய்திகள்
புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 90 குழந்தைகள் பிறந்தன
சென்னை
மாநில செய்திகள்

புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 90 குழந்தைகள் பிறந்தன

தினத்தந்தி
|
3 Jan 2023 11:53 AM IST

சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டு தினத்தில் 90 குழந்தைகள் பிறந்தன.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று உலகம் முழுவதிலும் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெப் வெளியிடும். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 90 குழந்தைகள் பிறந்துள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 25 குழந்தைகளும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் 19 குழந்தைகளும் பிறந்துள்ளன.

இதேபோல் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 28 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 18 குழந்தைகளும் பிறந்துள்ளன. இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் விவரம் வெளியிடப்படவில்லை.

குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், புத்தாண்டு பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்