< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 13 பவுன் நகை, ரூ.9 லட்சம் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 13 பவுன் நகை, ரூ.9 லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
21 Aug 2022 8:19 PM IST

இரணியல் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.9 லட்சம், 13 பவுன் நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திங்கள்சந்தை:

இரணியல் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.9 லட்சம், 13 பவுன் நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்

இரணியல் அருேக உள்ள வில்லுக்குறிைய அடுத்த குதிரைப்பந்தி விளையை சேர்ந்தவர் ஜோசப் அலெக்சாண்டர் (வயது 84), ஓய்வு ெபற்ற ஆசிரியர். இவருடைய மனைவி மேரிரெத்னா ஜோதி (80). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.

இதனால் வீட்டில் ஜோசப் அலெக்சாண்டரும், அவரது மனைவியும் வசித்து வந்தனர். மேலும் தங்களுக்கு உதவியாக வில்லுக்குறி ஆர்.சி.தெருவை சேர்ந்த மெல்டா (42) என்ற பெண்ணை ேவைலக்கு அமர்த்தியிருந்தனர். அவர் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வந்தார்.

நகை-பணம் திருட்டு

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜோசப் அலெக்சாண்டர் செலவிற்கு பணம் தேவைப்பட்டதால் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த ரூ.9 லட்சம் ெராக்கம், 13 பவுன் நகை ஆகியவை மாயமாகி இருந்தது. யாரோ நகையையும், பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோசப் அலெக்சாண்டர் இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்தார். அதில், தனது வீட்டில் வேலை செய்து வரும் மெல்டா நகை, பணத்தை திருடியிருக்கலாம் என கூறியிருந்தார்.

வேலைக்கார பெண் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மெல்டாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 6 மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பணம், நகையை திருடியதை அவர் ஒப்பு கொண்டார். பீரோவில் பணமும், நகையும் இருப்பது தெரியும். இதனால் அதனை நைசாக திருடி எதுவும் தெரியாதது போல் இருந்தேன். ஆனால் வீட்டு உரிமையாளர் போலீசில் புகார் தெரிவித்ததால் சிக்கி விட்டேன் என மெல்டா தெரிவித்துள்ளார்.

இதனை ெதாடர்ந்து மெல்டாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3 பவுன் நகையை மீட்டனர். மீதம் உள்ள நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்