தஞ்சாவூர்
பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
|பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
பட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
9 பவுன் சங்கிலி பறிப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த செம்படவன்காடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 42). சம்பவத்தன்று இரவு பட்டுக்கோட்டை ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டு தனலட்சுமி ஊருக்கு செல்வதற்காக மணிக்கூண்டு அருகே முத்துப்பேட்டை செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது அவரை அடையாளம் தெரியாத 3 பெண்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
3 பெண்களுக்கு வலைவீச்சு
இந்தநிலையில் செம்படவன்காடு பஸ் நிறுத்தத்தில் தனலட்சுமி இறங்கினார். இதையடுத்து அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை அந்த 3 பெண்களும் பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுபற்றி தனலட்சுமி பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.