மயிலாடுதுறை
சூதாடிய 9 பேர் கைது
|மணல்மேடு அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
மணல்மேடு அருகே கடலங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் கடலங்குடி பகுதியில் ் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கடலங்குடி அரண்மனை தெரு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டிக்கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
9 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பந்தநல்லூர் மேல செல்லப்பன் பேட்டையை சேர்ந்த கதிரேசன் (வயது37), திருக்கோடிக்காவலைசேர்ந்த தமிழரசன் (40), பந்தநல்லூர் நெய்குப்பையை சேர்ந்த முத்துக்குமார் (38), திருவிடைமருதூர் முல்லங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் கார்த்திகேயன் (34), திருவிடைமருதூரை சேர்ந்த முகமது ரபீக் (47), திருச்சியை சேர்ந்த முஸ்தபா (60), அத்திகடையை சேர்ந்த அனிபா (40), மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (48), காரைக்காலை சேர்ந்த சதீஷ்குமார் (50), ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.