< Back
மாநில செய்திகள்
வெறிநாய்கள் கடித்து 9 ஆடுகள் செத்தன
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வெறிநாய்கள் கடித்து 9 ஆடுகள் செத்தன

தினத்தந்தி
|
26 March 2023 12:15 AM IST

அரகண்டநல்லூர் அருகே வெறிநாய்கள் கடித்து 9 ஆடுகள் செத்தன.

திருக்கோவிலூர்,

நேற்று முன்தினம் ஆடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சந்திரா ஓட்டிச்சென்றார். பின்னர் மேய்ச்சல் முடிந்ததும் மாலையில் ஆடுகளுடன் வீடு திரும்பினார். தொடர்ந்து ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைத்து வைத்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள், நேற்று அதிகாலை 5 மணிக்கு பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறின. இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சந்திரா விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அங்கிருந்து நாய்கள் ஓடிவிட்டன. நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் செத்தன. மேலும் 2 ஆடுகள் காயம் அடைந்தன.

மேலும் செய்திகள்