< Back
மாநில செய்திகள்
9-ந்தேதி மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

9-ந்தேதி மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
7 May 2023 12:56 AM IST

9-ந்தேதி மின்நிறுத்தம்

ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கும்பகோணம் அருகே திரும்புறம்பியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் மின்வினியோகம் பெறும் திரும்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், இணைப்பிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மக்குடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாககுடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூர், ஜாமியாநகர், மூப்பக்கோவில், வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வருகிற 9-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கும்பகோணம் மின்வாரிய புறநகர் உதவி செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்