< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது

தினத்தந்தி
|
27 May 2022 12:00 AM IST

புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி 3 பேர் மற்றும் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்து வந்த 3 பேரையும் பொன்னமராவதி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 113 கிலோ புகையிலை பொருட்களை பொன்னமராவதி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை பொன்னமராவதி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.17 ஆயிரத்து 900-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்