திண்டுக்கல்
வத்தலக்குண்டுவில் சூதாடிய 9 பேர் கைது
|வத்தலக்குண்டுவில் சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்தலக்குண்டு பைபாஸ் சாலை பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது பட்டிவீரன்பட்டி குறுக்குசாலை பிரிவு அருகே உள்ள கரட்டு பகுதியில் 9 பேர் சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், தேக்கம்பட்டி சம்பத் (வயது 25), குணா (25), மார்க்கம்பட்டி சாமிநாதன் (45), சின்னாளப்பட்டி நாகராஜ் (26), பட்டிவீரன்பட்டி ராபர்ட் (44), செம்பட்டி சதீஷ்குமார் (36), நிலக்கோட்டை தியாகராஜன் (24), விராலிமலை கிருஷ்ணமூர்த்தி (37), திண்டுக்கல்லை சேர்ந்த நாகநாதன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.93 ஆயிரம், 9 செல்போன் மற்றும் 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.