< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வடபழனியில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|17 Nov 2022 2:11 PM IST
வடபழனியில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கோடம்பாக்கம், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உமாபதி. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஜனனி (வயது 12). இவர், அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை இவரது தந்தை வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் தனது மகள் ஜனனி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி ஜனனியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.